இந்த வலைப்பதிவில் தேடு

Translate

மஞ்சள் சாகுபடி: நடும் முறை முதல் லாபகரமான விற்பனை வரை முழு வழிகாட்டி!

மஞ்சள் பயிர் சாகுபடி
  

மஞ்சள் சாகுபடி

➊. முன்னுரை

 மஞ்சள், "இந்தியாவின் தங்கப் பயிர்" என்று அழைக்கப்படுகிறது. இது சமையல் மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஒரு விவசாயியாகவோ அல்லது தொழில்முனைவோராகவோ மஞ்சள் சாகுபடியில் இறங்க நினைத்தால், அதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

மஞ்சள் ஓர் வெப்ப மண்டலப் பயிர் ஆகும். தண்டில் உள்ள முலையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. இது இந்தியாவின் மிக பழமையான நறுமண பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளில் புனித பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.  ஆந்திர மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாக விளவிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்படுகிறது.இதனால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகரம் என்ற பெயரும் உண்டு.

  மஞ்சள் விளைச்சலை திறம்பட உயர்த்த சிறந்த பயிர்செய்கை முறைகள்: மஞ்சள் விவசாயத்தில் அதிக மகசூல் பெற சிறந்த பயிர் செய்கை முறை உள்ளன. அவை பின்வருமாறு:

➋. மண் மற்றும் தட்பவெப்ப நிலை:

 ♦ மஞ்சள் நன்கு வடிகட்டிய, வளமான, வண்டல் கலந்த செம்மண் அல்லது களிமண் நிலங்களில் நன்கு வளரும்.

 ♦ மஞ்சள் பயிரிட மிதமான வெப்பம் மற்றும் அதிக மழை தேவை.

➌. விதை நேர்த்தி:

 ♦ நோயற்ற, தரமான விதை கிழங்கு வகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

 ♦ விதைகளை பூஞ்சாணக் கொல்லி கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

➍. நடவு: 

 ♦ மஞ்சள் கிழக்குகளை 20-25 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

 ♦ வரிசைக்கு வரிசை 45-60  செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 25-30 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

➎. உர மேலாண்மை:

 ♦ மண் பரிசோதனை செய்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரமிட வேண்டும்.

 ♦ அடியுரமாக தொழு உரம் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும்.

 ♦ மேலுரமாக தழைச்சத்து உரங்களை இரண்டு அல்லது மூன்று முறை இட வேண்டும்.

➏. நீர் மேலாண்மை:

 ♦ மஞ்சள் பயிர்ருக்கு சீரான நீர் பாசனம் அவசியம்.

 ♦ மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து 10-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி வேண்டும்.

➐. களை கட்டுப்பாடு:

 ♦ நடவு செய்த 30- வது நாள் முதல் களை எடுக்க வேண்டும்.

 ♦ களைக்கொல்லிகளை பயன்படுத்தியும் களைகளை கட்டுப்படுத்தலாம்.

➑. பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு:

 ♦ மஞ்சள் பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் பூச்சி மற்றும் நோய் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.

 ♦ இலைப்புள்ளி மற்றும் இலைத்தீயல் நோயால் பாதிக்கப்பட்டால், பாதிப்புக்குள்ளான இலைகளை கிள்ளி எடுத்து எரித்துவிட வேண்டும். ஹெக்டே ருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது மேன்கோசெப் தெளிக்கவும்.

➒. அறுவடை:

 ♦ மஞ்சள் நடவு செய்த 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

 ♦ இலைகள் மற்றும் தண்டு காய்ந்த பிறகு கிழங்குகளை தோண்டி எடுக்க வேண்டும்.

➓. மஞ்சள் சுத்தம் செய்தல்:

 ♦ அறுவடை செய்த மஞ்சளை நன்கு கழுவி, மண்ணையும் அழுக்குகளையும் நீக்க வேண்டும்.

 ♦ கடினமான அழுக்குகளை நீக்க மென்மையான ப்ரஷ்களை பயன்படுத்தலாம்.

 ♦ கழுவிய மஞ்சளை சுத்தமான இடத்தில் உலர வைக்கவேண்டும்.

⓫. மஞ்சள் அவித்தல்:

 ♦ சுத்தம் செய்த மஞ்சளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவேண்டும்.

 ♦ மஞ்சள் நன்கு வெந்தவுடன், அதை எடுத்து ஆற வைக்கவேண்டும்.

 ♦ ஆறிய மஞ்சளை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் உலர வைக்கவேண்டும்.

 ♦ நன்கு உலர்ந்த மஞ்சளை அரைத்து தூளாகவும் பயன்படுத்தலாம்.

⓬. மஞ்சள் விற்பனை பின்வருமாறு:

உள்ளூர் சந்தைகள்:

 ♦ விவசாயிகள் தங்கள் மஞ்சளை நேரடியாக உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யலாம்.

 ♦ இந்த சந்தைகளில், மஞ்சளின் தரம் மற்றும் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்யபடுகிறது.

மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள்:

 ♦ மஞ்சள் தூள், மஞ்சள் எண்ணெய் மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யலாம்.

 ♦ இந்த விற்பனைக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு ஏற்ப பேக்கிங் மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.

ஆன்லைன் தளங்கள்:

 ♦ அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் மஞ்சளை விற்பனை செய்யலாம்.

 ♦ இதை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது.

ஏற்றுமதி:

 ♦ மஞ்சளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

⓭. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்:

 ♦ மஞ்சள் தூள், மஞ்சள் எண்ணெய், மஞ்சள் மாத்திரை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் விற்பனை செய்யலாம். இவை அதிக லாபம் தரக்கூடியவை.

விவசாய கூட்டுறவு சங்கங்கள்:

 ♦ விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யலாம்.

 ♦ இது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உதவுகிறது.

நேரடி விற்பனை:

 ♦ விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைச்சலை நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம்.

 ♦ இது இடைத்தரகர்களின் லாபத்தை குறைத்து விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க உதவுகிறது.

விற்பனையை அதிகரிக்கும் சில வழிகள்:

 ♦ மஞ்சளின் தரத்தை உறுதிபடுத்த வேண்டும்.

 ♦ சரியான பேக்கிங் முறையை பயன்படுத்தவேண்டும்.

 ♦ விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம்.

 ♦ வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கலாம். மேலும், மஞ்சள் விற்பனை சந்தையின் நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப விற்பனை உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.

⓮. அரசு கடன் மற்றும் மானியங்கள் 

 மத்திய மற்றும் மாநில அரசுகள் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன: 

 ♦ சொட்டுநீர்ப் பாசன மானியம்: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. 
♦ தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM): விதை மஞ்சள் வாங்குவதற்கும், உலர்த்தும் தளம் (Drying yard) அமைப்பதற்கும் மானியங்கள் கிடைக்கின்றன. 
 ♦ முத்ரா கடன் (Mudra Loan): மஞ்சள் தூள் தயாரிக்கும் சிறு தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் வரை பிணையில்லா கடன் பெறலாம். 
 ♦ கிசான் கிரெடிட் கார்டு (KCC): சாகுபடி செலவுகளுக்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. 

 ⓯. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

 🅐. ஒரு ஏக்கரில் எவ்வளவு மகசூல் கிடைக்கும்? சரியான பராமரிப்பு இருந்தால், ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் உலர்ந்த மஞ்சள் கிடைக்கும்.
 🅑. ஈரோடு மஞ்சளின் சிறப்பு என்ன? ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு (GI Tag) கிடைத்துள்ளது. இதில் குர்குமின் அளவு அதிகமாக இருப்பதால் உலக அளவில் தனி வரவேற்பு உண்டு. 
 🅒. நடவு செய்ய எந்த ரகம் சிறந்தது? ஈரோடு உள்ளூர் ரகம், பி.எஸ்.ஆர்-1, பி.எஸ்.ஆர்-2 மற்றும் பிரகதி போன்றவை அதிக மகசூல் தரும் ரகங்கள். 
 🅓. மானியத்திற்கு யாரை அணுக வேண்டும்? உங்கள் பகுதியில் உள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகினால் விரிவான தகவல்களைப் பெறலாம். 

 ⓰. முடிவுரை: 

 மஞ்சள் சாகுபடி என்பது வெறும் விவசாயம் மட்டுமல்ல, அது ஒரு நிலையான வருமானம் தரும் வணிகம். சரியான தொழில்நுட்பம், அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சந்தை நிலவரத்தை உணர்ந்து செயல்பட்டால், மஞ்சள் விவசாயத்தில் பெரும் லாபம் ஈட்டுவது உறுதி. "மஞ்சள் பூசிய நிலம், விவசாயிக்குத் தரும் தங்கம்" என்பது மிகையல்ல.

கருத்துரையிடுக

0 கருத்துகள்